காங்., கட்சியினர் ஊர்வலம்
திண்டிவனம்; வாக்காளர் பட்டியல் மோசடியை கண்டித்து, திண்டிவனத்தில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் மோசடியை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் திண்டிவனத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர ,தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் உதயானந்தன், தட்சணாமூர்த்தி, அஜீஸ், வெங்கட், ஜெய்கணேஷ், பொன்ராஜா, சாமிநாதன் பங்கேற்றனர்.