உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காங்., ஆலோசனை கூட்டம்

காங்., ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கட்சி சார்பில் வட்டார, பேரூராட்சி, நகர, கிராம குழு மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் மாநில துணை தலைவர்கள் ராம சுகந்தன், ரங்க பூபதி, எஸ்தர் எமிமாள் பங்கேற்றனர்.அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், மாநில செயலாளர் தயானந்தம் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர்கள் பாரிபாபு, முத்து, ஆறுமுகம், துணை தலைவர் சந்தானகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகர, பேரூராட்சி, கிராம அளவில் கட்சி நிர்வாகிகளை புதிதாக நியமித்து மறு சீரமைப்பு குறித்து ஆலோசனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி