உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

 கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

செஞ்சி: செஞ்சி அருகே 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துாரைச் சேர்ந்தவர் திருமலை மகன் ஜானகிராமன், 32; பில்டிங் காண்ட்ராக்டர். இவர், செஞ்சி அடுத்து காமகரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கு காண்ட்ராக்ட் முறையில் வீடு கட்டி வருகிறார். இவர் வீடு கட்டி வரும் இடத்தில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 29 பெட்டி டைல்ஸ், 9 பெட்டி மின் ஒயர்கள், 12 இரும்பு சீட்டுகள் சில தினங்களுக்கு முன் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், காமகரத்தைச் சேர்ந்த முனியப்பன், 51; அவரது 17 வயது மகனும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முனியப்பனை போலீசார் கைது செய்து அவரது மகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை