மேலும் செய்திகள்
தார் சாலை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
15-Jun-2025
செஞ்சி : செஞ்சி 'பி' ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.செஞ்சி பி ஏரியில் உபரி நீர் வெளியேறும் கலிங்கல் பகுதியை புதிதாக கட்டவும், உபரிநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் கட்டவும், கால்வாயை புனரமைக்கவும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமி பூஜைக்கு, பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தார்.மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், ஜான் பாஷா, கார்த்திக், பொன்னம்பலம், நகர பொருளாளர் நெடுஞ்செழியன், தொண்டரணி பாஷா பங்கேற்றனர்.
15-Jun-2025