உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீவனூர் ஆர்.ஐ., அலுவலகம் கட்டுமான பணி துவக்கம்

தீவனூர் ஆர்.ஐ., அலுவலகம் கட்டுமான பணி துவக்கம்

மயிலம்: தீவனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடப் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.தீவனூர் ஊராட்சியில் ரூ. 35 லட்சம் செலவில் புதியதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.விழாவில் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் மணிமாறன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்சுதீன், கலை இலக்கிய அணி செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சேகர், விவசாய அணி பாஸ்கர், கட்சி நிர்வாகிகள் அன்பு சேகர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை