மேலும் செய்திகள்
கிணற்றில் முதியவர் உடல்
08-Apr-2025
திண்டிவனம், : திண்டிவனம் அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியில் சிக்கி கட்டட தொழிலாளி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவன், 68; இவரது விவசாய நிலத்தை, அதே கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் குத்தகைக்கு பயிர் செய்து வருகிறார். நேற்று காலை அய்யப்பன் நிலத்திற்கு அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியில் சிக்கி ஒருவர் இறந்து கிடந்ததார். வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இறந்தவர் யார் என்ற முகவரி தெரியாததால், அவரது உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், மின் கம்பியில் சிக்கி இறந்தது, ஏதாநெமிலி கிராமம் அருகே உள்ள மேல் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி அர்ஜூனன், 56; என தெரியவந்தது. கடந்த 2 ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற அர்ஜூனன், தாதாபுரத்தில் மின் கம்பியில் சிக்கி இறந்து கிடந்தது சந்கேத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அவரது மகன் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08-Apr-2025