உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலோசனைக் கூட்டம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலோசனைக் கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை, செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செயலாட்சியர் முத்து மீனாட்சி தலைமை தாங்கி தற்போது ஒரு சில இடங்களில் மஞ்சள் இலை நோய், யொக்க யோங் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் கரும்பு பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படும், நோயின் அறிகுறி தென்பட்டவுடன் புரோப்பிகோனோசல், இமிடாகுளோமிட் ஆகிய மருந்துகளை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். கரும்பு நடவுக்கு முன்பே கரணிகளை விதை நேர்த்தி செய்தால் நோய் வருவதை தவிர்க்கலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் தாமரைச்செல்வி, கரும்பு நடவு செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தனர். கரும்பு அலுவலர்கள் விஜயலட்சுமி, ஆரோக்கியராஜ், விவசாயிகள், கரும்பு அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கரும்பு அலுவலர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி