ஆலோசனை கூட்டம்
விழுப்புரம், ; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம், தேர்தலையொட்டி, ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான பணிகள் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜனகராஜ், வழக்கறிஞர் கண்ணப்பன், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு உட்பட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.