உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்குசாவடி முகவர்களுடன் ஆலோசனை

வாக்குசாவடி முகவர்களுடன் ஆலோசனை

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வாக்குசாவடி முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிந்தாமணியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை தலைமை தாங்கினார் . தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி கலந்து கொண்டு முகவர்களுடன் உறுப்பினர்கள் சேர்க்கையை விரைந்து சேர்ந்து அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை , காணை ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், திட்டக்குழு முருகன், நகர செயலாளர் நைனாமுகமது, துணை செயலாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் முரளி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, தொழில்நுட்ப அணி சாம்பசிவம், கபிலன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அருள்மொழி, நகரஇளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசந்திரன் ,நகர பொருளாளர் பாபுஜி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், கிளை செயலாளர் ராஜ்காந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை