உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு

செஞ்சி அரசு கல்லுாரியில் 9ம் தேதி கலந்தாய்வு

செஞ்சி : செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 9ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.கல்லுாரி முதல்வர் ஸ்ரீவித்யா செய்தி குறிப்பு:செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கு இந்தாண்டு சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.கலந்தாய்விற்கு வரும் போது பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையவழி விண்ணப்ப படிவ நகல்கள் இரண்டு, மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 3 நகல்கள் அல்லது பள்ளி தலைமையாசிரியரால் சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் தாள் அசல் மற்றும் 3 நகல்கள், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் முதல் பக்கம் 3 நகல்கள், கைப்பேசியுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை அசல் மற்றும் 3 நகல்கள், கடவு சீட்டு அளவு புகைப்படங்கள் 5, வருமான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும்.மேலும் சேர்க்கை உறுதி செய்யப்பட்டால் செலுத்த வேண்டிய கட்டண தொகையாக பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., மாணவர்கள் 3,420 ரூபாய். பி.எஸ்சி., மாணவர்கள் 2,540 ரூபாய் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ