மேலும் செய்திகள்
சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்து கொலை
13-Apr-2025
கோட்டக்குப்பம்: கோட்டகுப்பத்தில் பைக்கிற்கு வழிவிட மறுத்ததாக, காரில் வந்த தம்பதியை சரமாரியாக தாக்கிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, திருவேற்காடு கூட்டுறவு காலனி அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயகோபால் மகன் சவுந்தர்ராஜன், 27; இவர் தனது மனைவியுடன், நேற்று காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின், இரவு 9.30 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டார். காரை சவுந்தராஜன் ஓட்டினார்.கோட்டக்குப்பம் வழியாக இ.சி.ஆரில் சென்ற காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் வலது பக்கம் வேகமாக செல்ல முயற்சி செய்து உள்ளார். அப்போது, போக்குவரத்து அதிகமாக இருந்ததால், காரில் சென்ற சவுந்தரராஜன், பின்னால் வந்த பைக்கிற்கு வழி விட முடியவில்லை.கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் சந்திப்பில் சென்றபோது, பைக்கில் சென்ற நபர், காரை வழிமறித்து, சவுந்தரராஜனை காரில் இருந்து கீழே இறக்கினார். தனது நண்பர்களை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். அங்கு வந்த கும்பல், சவுந்தரராஜனை சரமாரியாக தாக்கியது. தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அடி விழுந்தது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
13-Apr-2025