உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் சிறப்பு கோர்ட் தீர்ப்பு கூறியது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சாத்தனுாரை சேர்ந்தவர் நஷீர்பாஷா, 42; மளிகை கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு கடந்த 5.11.2017ம் தேதி பொருள் வாங்க வந்த 8 வயது சிறுமியை, நஷீர்பாஷா வீட்டிற்குள் அழைத்துசென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர்போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நஷீர்பாஷாவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்து வந்த நீதிபதி வினோதா, குற்றவாளியான நஷீர்பாஷாவுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, ரூ.5 லட்சம் அரசு தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், நஷீர்பாஷாவை கடலுார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜன 23, 2025 05:54

பன்றிக்கு ஆட்டுத்தாடி


Mani . V
ஜன 23, 2025 05:47

இவர் முக்கிய கட்சியின் உறுப்பினராக இருந்தால், வானளவு அதிகாரம் கொண்டவர் கூட "என் தம்பி" என்று சொல்லி இருப்பார். பொய்யாக கட்டுப் போட்டு போட்டோ சூட் நடத்தி மக்களை ஏமாற்றி இருப்பார்கள். "ஞானம்" வரவேண்டும்.


சமீபத்திய செய்தி