உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

விக்கிரவாண்டியில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

விழுப்புரம்; விக்கிரவாண்டியில் நாளை (19ம் தேதி) கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடக்கிறது.கிரிக்கெட் சங்க கவுரவ இணை செயலாளர் ரமணன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வளரும் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்களை கண்டறிந்து சீர்படுத்துவதற்காக டேலண்ட் ஸ்கவுட்டிங் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் பயிற்சி நடக்கிறது. இதில், ஆண்கள் (பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள்) டேலண்ட் ஸ்கவுட்டிங்கில் அட்டவணைப்படுத்தவுள்ளனர்.வரும் 19 ம் தேதி காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு நடக்கிறது. இதில் பங்கேற்க, 13 மற்றும் 21 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் தகுதியுடையோர் ஆவர். இந்த வீரர்கள் சரியான வெள்ளை கிரிக்கெட் உடையை அணிய வேண்டும். இவர்களின் சொந்த கிரிக்கெட் கிட்டையும் கொண்டு வரவேண்டும்.வீரர்கள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து பதிவு படிவங்களை தொடர்பு கொண்டு பெறலாம். இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் பெற விரும்புவோர், 9555030006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை