உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு

 பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு

வானுார்: கொந்தமூர் கிராமத்தில் ராபி பருவத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீட்டினை வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். வானுார் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் ராபி பயிர் சாகுபடி கணக்கெடு பணியை வேளாண்மை துறை, தோட்டகலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப் பு பணி துவங்கப்பட்டுள்ளது. வானுார் வட்டாரத்தில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 85 ஆயிரத்து 558 புல உட்பிரிவு எண்களுக்கு, இதுவரை 2,350 உட்பிரிவு எண்களில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொந்தமூர் கிராமத்தில் மி ன்னணு முறையில் சவுக்கை மற்றும் உளுந்து பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு குறித்து வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'எஞ்சியுள்ள உட்பிரிவுகளை 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண்மை துறை மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில் புல எண் வாரியாக சாகுபடி விபரங்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திட வேண்டும். இதிலிருந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பருவம் வாரியாக எவ்வளவு பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் துல்லியமாக அறிய முடியும்' என்றார். ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன் மற்றும் சுகாதார ஊக்குநர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ