உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அரசின் அதிகாரத்தை பறித்த யு.ஜி.சி., தி.மு.க., அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

மாநில அரசின் அதிகாரத்தை பறித்த யு.ஜி.சி., தி.மு.க., அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம்: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றஞ்சாட்டினார்.விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நிருபர்களை சந்தித்த சண்முகம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. தற்போது, உயர்கல்விக்கான மாநில உரிமையை பறிக்கும் வகையில், பல்கலை.,க் கான யு.ஜி.சி., சட்டத்திருத்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி துணை வேந்தர் நியமனம் முதல் அனைத்து அதிகாரமும் கவர்னருக்கு வழங்குகிறது.இதனால், துணை வேந்தர் நியமனம், பணியாளர் நியமனங்களுக்கான இடஒதுக்கீடு போன்றவை பாதிக்கப்படும். பல்கலை கழகங்களை உருவாக்குவது, அதற்கு இடமளிப்பது, சம்பளம் வழங்குவதை செய்யும் மாநில அரசுக்கு நிர்வாக அதிகாரம் பறிக்கப்படுகிறது. பேராசிரியர் அல்லாதவரையும் துணை வேந்தராக நியமிப்பது, அவுட்சோர்சிங் பணி, என மாற்றங்களை செய்ய உள்ளனர். இது மத்தியரசின் கொள்கையை திணிப்பதற்கு, மாநில அரசு மீது தொடுக்கும் போராகும். கடந்த 32 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திணிப்பும் ஏற்கப்பவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான் கச்சத்தீவை தாரை வார்த்தனர். மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றினர், சிறு வணிகத்தில் அன்னியமுதலீட்டை நுழைத்தனர், தி.மு.க., அரசு எதையும் தீவிரமாக எதிர்க்கவில்லை. இப்போது, 40 எம்.பி.,க்கள் இருந்தும், தமிழகத்தில் பா.ஜ.,வை எதிர்த்தும், டெல்லியில் பதுங்கியும் நாடகம் நடத்துகின்றனர்.தற்போது, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை, மத்திய அரசு நிறுவனத்துக்கு தாரை வார்த்துள்ளனர். தமிழக மக்கள் மீது அக்கரையிருந்தால், இவர்கள் டெ ல்லியிலும் எதிர்த்து போராட வேண்டும்.அண்ணா பல்கலை., வன்கொடுமை சம்பவத்தில், யார் அந்த சார் என, குற்றவாளியை தான் யார் என கேட்கிறோம். தி.மு.க., ஏன் அச்சப்படுகிறது என தெரியவில்லை. இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை