உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் பெஞ்சல் புயல் வெள்ள சேதப்பகுதிகளை சீரமைக்க வேண்டும்

விழுப்புரத்தில் பெஞ்சல் புயல் வெள்ள சேதப்பகுதிகளை சீரமைக்க வேண்டும்

விழுப்புரம் : விழுப்புரம் தொகுதியில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ள சேதங்களை, விரைந்து சீர்படுத்தி தர வேண்டும் என்று டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.தமிழக சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்ற அவர் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால், முக்கிய நீர்பாசன ஆதாரங்களான தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பை வாய்க்கால் ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. பொய்யப்பாக்கம், பூவரசன்குப்பம், பஞ்சமாதேவி, முத்தாம்பாளையம், கோலியனூர் ஆகிய ஏரிகள் உடைந்ததால், அப்பகுதி விவசாய விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. தளவானூர், அரசமங்கலம், சின்னக்கள்ளிப்பட்டு ஆகிய கிராமப்பகுதிகளில் தென்பெண்ணையாற்றின் கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து பெறும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், பில்லூர், சேர்ந்தனூர், அரசமங்கலம், பஞ்சமாதேவி, பூவசரன்குப்பம் பகுதிகளில் கரை உடைந்து சேதம் ஏற்பட்டது. அதனை செப்பனிட்டு தர வேண்டும்.தளவானுாரில் புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும். விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட சாலாமேடு, வழுதரெட்டி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும்.விழுப்புரம் நகரம் மருதூர் ஏரியை தூர்வாரி, ஏரியின் கரைகளை வலுப்படுத்தி, நடைபாதை அமைத்தும், விவசாயபாசன வசதி கொண்டதாகவும் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !