உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கெங்கவரம் காட்டு பகுதியில் சேதமான சாலை

கெங்கவரம் காட்டு பகுதியில் சேதமான சாலை

செஞ்சி: கெங்கவரம் காட்டுப்பகுதியில் பெஞ்சல் புயலால் சேதமான தார் சாலையை சீர் செய்யாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.செஞ்சியில் இருந்து திருக்கோவிலுார், வேட்டவலம், மணலுார்பேட்டைக்கு செல்வதற்கான பிரதான சாலையாக ஆலம்பூண்டி-மழவந்தாங்கல் சாலை உள்ளது. இந்த சாலையில் கெங்கவரம் காப்பு காடு பகுதி உள்ளது. கடந்த மாதம் பெஞ்சல் புயலின் போது இப்பகுதி சாலைகளில் வெள்ளம் சென்றதால் தார் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.பழுதடைந்துள்ள சாலை சீரமைக்கப் படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ