உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல மேலாளர் தெய்வராஜா, கிளைத் தலைவர்கள் ரமேஷ், துளசி, செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் அமரேசன், செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தொழிற்பயிற்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி