உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூடுதல் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

கூடுதல் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் பாசபரிமளம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் செந்தில்குமார், செயலாளர் லிங்கம், தெற்கு மாவட்ட தலைவர் காண்டீபன், வடக்கு தலைவர் முருகன் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், வெள்ளத்தால் பாதித்தவர்களுக்க ரேஷன் கார்டு அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வழங்கியது போல தலா 6,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமான குடிசைகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி