உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் ஊதிய ஒப்பந்தம் முடிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தங்கபாண்டியன், நந்தகோபால், கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை தலைவர் வேலு, துணை செயலாளர் முருகன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பழமலை, ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல துணை செயலாளர் நாகராஜன், துணை தலைவர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். குணசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ