உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனம் உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) சுமதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, உழவர் சந்தை செயல்பாடுகள், விவசாயிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை, காய்கறிகள் வரத்து, விற்பனை மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், எடை தராசு, கழிவறை மற்றும் பஸ் வதி உள்ளிட்ட அனைத்தையும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.மேலும் உழவர் சந்தையில் தினசரி பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளுக்கு உழவர் சந்தையின் திட்ட வழிமுறைகள் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், ஆணையர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களை விவசாயிகளிடம் துணை இயக்குனர் எடுத்துக் கூறினார். ஆய்வின் போது, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா, வேளாண் உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.