தவெக., மாநில மாநாடு வெற்றி முருகனுக்கு சிறப்பு பூஜை
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்ததை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த மாதம் 27 ம்தேதி தவெக மாநாடு சிறப்பாக நடந்தது.இதையடுத்து அய்யூர் அகரம் முருகன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.மாவட்ட தலைவர் குஷி மோகன், துணை தலைவர் வடிவேல், ஒன்றிய நிர்வாகிகள் சேகர், காமராஜ், ரமேஷ், பாரதி, மணிராஜன், தனஞ்செயன், பிரித்திவிராஜ், தாஸ், ரமேஷ், அரவிந்த், முத்துக்குமரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.