உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்

புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்

வி ழுப்புரம் அருகே பைபாஸ் பணியின்போது சேதமடைந்த அய்யனார் கோவில் சுற்று சுவரை, கட்டித்தர வேண்டுமென கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த வி.கொளத்துார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் எல்லை பகுதியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. பிரமாண்ட சுவாமி சிலைகளும், சுற்று சுவர் வசதியுடன் இருந்த இந்த கோவில் வழியாக விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்கான புறவழிச் சாலை அமைத்தனர். அப்போது, இக்கோவிலின் சுற்றுசுவரை இடித்துவிட்டு சாலை பணிகள் நடந்தது. சாலை பணிகள் முடிந்து நான்கு வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டுச் சென்ற கோவில் சுற்று சுவரை கட்டித் தரப்படவில்லை. இந்த சாலை பணியின்போது, புதிதாக கோவில் சுற்றுசுவர் அமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் உறுதியளித்திருந்தபோதும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நான்கு வழிச்சாலையின் மிக ஓரமாக இந்த கோவில் உள்ளதால், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், அய்யனார் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம், அதிவேகமாக வந்த ஒரு லாரி கோவில் சுவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அய்யனார் கோவிலுக்கு சுற்றுசுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, கோவில் நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் தேசிய நெடுஞ்சாலை துறை, கலெக்டருக்கும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை