மேலும் செய்திகள்
சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
23-Sep-2025
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நாளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல கோவில் பகுதியில், பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவது கிடையாது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக மேல் மலையனுாருக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதையொட்டி மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஊஞ்சல் உற்சவம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம், பக்தர்கள் நிற்கும் இடம், கோவில் பிரகாரம், தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் குவியும் இடங்களை பார்வையிட்டனர். விழாவின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ், இன்ஸ்பெக்டர் வினிதா, தாசில்தார் தனலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பொதுவாக இது போன்ற விழாக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து விழுப்புரத்தில் தான், ஆலோசனை கூட்டம் நடத்துவர். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில், 41 பேர் இறந்த சம்பவத்திற்கு பிறகு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்நிலையில், தற்போது போலீஸ் டி.ஐ.ஜி., எஸ்.பி., உள்ளிட்டோர் மேல்மலையனுாரில் ஆய்வு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
23-Sep-2025