உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அக்ஷர்தம் பள்ளியில் தினமலர் - பட்டம்வினாடி-வினா

விழுப்புரம் அக்ஷர்தம் பள்ளியில் தினமலர் - பட்டம்வினாடி-வினா

விழுப்புரம்: விழுப்புரம் அக்ஷர்தம் சென்ட்ரல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் 'தினமலர்'பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி நடந்தது. புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி-வினா போட்டி, அக்ஷர்தம் பள்ளியில் நேற்று நடந்தது.முன்னதாக நடந்த தகுதி சுற்று முதல் நிலைத் தேர்வில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுவாக பிரிக்கப்பட்டு, இரண்டு சுற்றுகள் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வர் பிரணவன் தலைமை தாங்கினார். போட்டியில் மாணவிகள் லோகஜனனி, பத்மஜா முதலிடத்தையும், மாணவர்கள் பொன்முடி, நிரெஞ்சனா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.இதில், போட்டி ஒருங்கிணைப்பு ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை