உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர்: வீட்டு மனை பட்டா கேட்டு திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லூர் வட்டம் டி. புதுப்பாளையம், சிறுமதுரை, டி.எடையார், சித்தலிங்கமடம், பெண்னைவலம், அமாவாசைபாளையம், ஆமூர், துலங்கம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். நேற்று முன்தினம் தாசிதார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று காலை தாசில்தார் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்திற்குள் தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை ஏற்று மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ