மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில், நுாற்றாண்டு விழா, திருவள்ளுவர் சிலை திறப்பு, பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேகா,வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயச்சங்கர், கவிதா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேவநேசன் வரவேற்றார்.பள்ளி முன்னாள் மாணவர்கள் நூற்றாண்டு விழா தீபச்சுடரையும், மகளிர் சுய உதவி குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.டி.இ.ஓ., அருட்செல்வி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.கிராம பொதுமக்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி., டிவி, சேர்கள், டேபிள் கள், குழந்தை விளையாட்டு உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர்கள் வி.ஏ.ஓ., உதயகுமார், போலீஸ் கான்ஸ்டபிள் ரகு, சரவணன், புரவலர் ராமலிங்கம், துணை தலைவர் அய்யனார், முன்னாள் தலைவர் தேவராசு, கோவிந்தன், ஆசிரியர்கள் சசிகலா, அகல்யா, மாரியம்மாள், ஜெயமூர்த்தி, ஆனந்த மூர்த்தி, ஜெயந்தி, முன்னாள் மாணவர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினர்.
28-Mar-2025