ஜெ.,பேரவையினர் துண்டு பிரசுரம் வழங்கல்
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., ஜெ.,பேரவை சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நேற்று மாலை திண்டிவனத்தில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், நகர ஜெ., பேரவை செயலாளர் ரூபன்ராஜ் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை, ரவி, மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர்கள் விஜயகுமார், வடபழனி.நகர இஞைரணி செயலாளர் உதயகுமார், கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், பன்னீர், ஒலக்கூர் ஒன்றிய நிர்வாகிகள் ராஜகேரன், குபேரன், செந்தாமரைக்கண்ணன், யோகானந்த், வழக்கறிஞர் குலசேகரன், கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர்கள் திருப்பதியார் சங்கர், பாலச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.