உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மை இயக்க 2.0 மாவட்ட குழு கூட்டம்

துாய்மை இயக்க 2.0 மாவட்ட குழு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் துாய்மை இயக்கம் 2.0 மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி கூறியதாவது; துாய்மை இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கும், மக்காத குப்பையை கண்டறிந்து வகைப்படுத்தும், செயல்திட்டம்படி, மக்காத குப்பையை சேகரித்து மாவட்ட அளவில் உள்ள கொள்முதல் நிறுவனங்களிடம் அரசு நிர்ணயம் செய்த விலை விதத்தில் விற்பனை செய்ய வேண்டும். இந்த விபரங்களை துாய்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மக்கும் குப்பைகளை மறு சுழற்சி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக துறை சார்ந்த அலுவலர்கள் முனைப்போடு பணியாற்ற வேண்டும். அதே போல், மறு சுழற்சி செய்யும் குப்பைகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர்புற பகுதிகளில் கட்டட கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்த்து, அதற்கான பகுதிகளில் கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பின்பற்றினால் நீர்நிலைகளை பாதுகாக்கலாம். ஊராட்சியில் இருந்து வரும் திரவ கழிவுகளை நகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், உதவி இயக்குநர் மஞ்சுளா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ