உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட அளவிலான கலைப் போட்டி

மாவட்ட அளவிலான கலைப் போட்டி

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டி நடந்தது.விழுப்புரத்தில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய மாவட்ட அளவிலான கலைகளில் போட்டிகள் நேற்று நடந்தது.விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நடந்த போட்டியில், பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்ட போட்டிகளும், கிராமியக் கலை நடனங்களும் நடந்தது.இதே போல், குரலிசைப் போட்டியில், கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும் பாடி மாணவர்கள் அசத்தினர்.கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குமார் செந்தில்குமார், சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மஞ்சுகண்ணன், ஆசிரியர்கள் கீதா, ஹேமாமஞ்சுளா, குணசேகரன், சாந்தி உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.ஓவியப் போட்டியில், பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் பிரஷ்கள் மூலம் மாணவர்கள், விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அசத்தினர்.போட்டிகளில், 5 வயது முதல் 16 வயது வரை 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி