உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு கண்காட்சி

மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள், சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஐ.ஜி., உமா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கண்காட்சியை திறந்து வைத்து கூறுகையில், 'இங்கு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் மூலம் 55 விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களைத் தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கண்காட்சி இடம் பெற்றுள்ளது.இதற்காக பள்ளி, கல்லுாரிகளில் நடந்த ஓவியம், பேச்சுப் போட்டியில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்' என்றார்.கூட்டத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஏற்பாடுகளை எஸ்.பி., சரவணன் செய்திருந்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் இளமுருகன், தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ