மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான அணி தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான மாவட்ட அணி தேர்வு செய்யவுள்ளனர். இதற்கான தேர்வு வரும் 15ம் தேதி காலை 9.00 மணிக்கு விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. இதில், பங்கேற்க கடந்த 2011ம் ஆண்டு ஆக., 31ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்கும் அனைவரும் தங்களின் பிறப்பு சான்றிதழ், ஆதார் சமர்பிக்க வேண்டும். இது பற்றி மேலும் விபரங்கள் பெற வேண்டுவோர், ரவிக்குமார் மொபைல் 8098899665, ரமணண் 9555030006 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ரமணன் தெரிவித்துள்ளார்.