உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வல்லத்தில் தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

வல்லத்தில் தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: வல்லத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.வல்லம் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த விஜயகாந்த் நினைவு தினம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். பொருளாளர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரேசன், வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயசங்கர், வழக்கறிஞரணி செயலர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் உமாபதி, மாவட்ட பிரதிநிதிகள் பிரதீப், சங்கர், ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ