உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம்

தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் சட்டசபை தொகுதி மற்றும் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.திண்டிவனம் மேற்பார்வையாளர் ஜாபர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், துணைச் செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான், பூத் ஏஜன்ட்டுகள் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி.நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், நகர துணைச் செயலாளர் கவுதமன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், சின்னதுரை, அயலகஅணி முஸ்தபா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை