மேலும் செய்திகள்
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
09-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, சந்திரசேகரன், முரளி, மைதிலி ராஜேந்திரன், சீனு செல்வரங்கம், பேரூர் செயலாளர் ஜீவா, நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றி, இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற துணை தலைவர் சித்திக்அலி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜவேல், கலைவாணன், பிரேம், தேவேந்திரன், வீராசாமி, பொன்னுரங்கம், ஒன்றிய அமைப்பாளர்கள் சுந்தர், ஏழுமலை, ராஜசேகர், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள் நியமனம் மற்றும் வரும் நவ., 27 ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
09-Oct-2025