உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்; திண்டிவனத்தில் தி.மு.க., சார்பில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம் நகரம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் சேகர், செயற்குழு உறுப்பினர் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பாபு, முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், நகர துணைச் செயலாளர் கவுமதன், மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி