தி.முக., தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார் சட்டசபை தொகுதியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' எனும் தலைப்பில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. வானுார் அருகே முட்ராம்பட்டு தனியார் மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். அவர் வானுார் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, விரிவான ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வக்கீல் கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், பிரேமா குப்புசாமி, கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முரளி, மைதிலி ராஜேந்திரன், செல்வமணி, பாஸ்கர், ராஜி, சீனு செல்வரங்கன், புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.