துண்டு பிரசுரம் தி.மு.க., வழங்கல்
விழுப்புரம்; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காணை ஒன்றியம் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.காணை கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகன், துணைச் சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், 1989ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உருவாக்கி 20 சதவீதம் இடஒதுக்கீட்டை முன்னாள் முல்வர் கருணாநிதி வழங்கினார் என்ற துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினார்.நிர்வாகிகள் பழனி, செல்வம், நாராயணசாமி, சக்கரவர்த்தி, கருணாகரன், மதன், புனிதா, அய்யனார், சிவராமன், அரசு வழக்கறிஞர் கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.