உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றியம், தி.குன்னத்துார் ஊராட்சியில் 'மண், மொழி, மானம் காக்க இணைவோம் ஒரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.புதிய உறுப்பினர் சேர்க்கையை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தங்கம், ஒன்றிய நிர்வாகிகள் தீனதயாளன், ஏழுமலை, இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜயரங்கம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !