உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

வானுார்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கோட்டக்குப்பம் நகர வார்டுகளில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். சின்ன முதலியார் சாவடிகுப்பத்தில் நிர்வாகிகள், அப்பகுதி மக்களிடம், தமிழக முதல்வரின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து உறுப்பினராக சேர்த்தனர்.தொடர்ந்து அக்பர் வீதி, புறாதோப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, குட்ட வாப்பு தெரு, ரஹமத் நகர், சின்னக்கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தேர்வு, வர்க்கத் நகர் ஆகிய பகுதிகளில் ஓட்டுச்சாவடி முகவர்களுடன் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துரையாடினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், அவைத் தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, நகர்மன்ற துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், மீனவர் அணி அமைப்பாளர் மணி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் வினோபாரதி, ஐ.டி., பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ