உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடிக்கு மீண்டும் பதவி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

பொன்முடிக்கு மீண்டும் பதவி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

விக்கிரவாண்டி: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் மாநில துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை, தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடியை மாநில துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவி, கில்பர்ட் ராஜ், நகர செயலாளர் நைனா முகமது, ஒன்றிய தலைவர் முரளி. மாவட்ட தலைவர் அரிகரன், நகர துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாந்த், சித்ரா, நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சிவா, இம்ரான், மாவட்ட அமைப்பாளர் சூர்யா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், சுதா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை