உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம் 

தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம் 

திண்டிவனம்: தி.மு.க., உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள், முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மயிலம் மேற்கு ஒன்றியம் பெலாக்குப்பம் மற்றும் திண்டிவனம் நகரப்பகுதி தி.மு.க., நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 பேர் நேற்று காலை, திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், மாவட்ட ஐ.டி., பிரிவு இணை செயலாளர் சவுகத்அலி, பெலாக்குப்பம் சீனுவாசன், பாசறை நிர்வாகிகள் கார்த்திக், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை