விழுப்புரத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், இன்று மாலை நடக்கும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டத்தில் கட்சியினர், பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம், இன்று மாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சி திடலில் நடைபெற உள்ளது இக்கூட்டம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ் தலைமையிலும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் புஷ்பராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் சேர்மன்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடக்கிறது. மாநில செய்தி தொடர்புக்குழு தலைவர் முன்னாள் எம்.பி., இளங்கோவன் சிறப்புரையாற்றுகிறார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன், வானுார் தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பெருந்தலைவர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.