உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொதுக்கூட்டம் 

தி.மு.க., பொதுக்கூட்டம் 

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் முத்துகிஷ்ணன், தீர்த்தமலை, ராஜாராம் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.பேச்சாளர் பவானி கண்ணன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மஸ்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், செயற்குழு உறுப்பினர் சீனி ராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.தேவேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை