வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்து எங்கள் குடும்பம் கொள்ளையடிக்க நீங்கள் உழைக்கவேண்டும்.
விழுப்புரம் ; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணிகள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. .விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி வரவேற்றார். அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர இளைஞரணி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில், துணை முதல்வர் உதயநிதி பேசிய போது, வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல வேண்டும். முதல்வர் நிர்ணயித்துள்ள இலக்கை மனதில் ஏந்தி அயராது உழைத்திட வேண்டும். மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழக அமைப்புகளும், கழகத்தில் 23 சார்பு அணிகளும் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே அணி. இதுவும் கலைஞர் அணி என்ற உணர்வோடு தேர்தல் பணியாற்றிடுவோம். வரும் 2026ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க., ஆட்சியை அமைக்கும் வகையில், அடுத்து வரும் ஒவ்வொரு நாளிலும் அயராது உழைப்போம் என கூறினார்.
2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்து எங்கள் குடும்பம் கொள்ளையடிக்க நீங்கள் உழைக்கவேண்டும்.