உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் நாளை தி.மு.க., தெற்கு, மத்திய மாவட்ட செயற்குழு

விழுப்புரத்தில் நாளை தி.மு.க., தெற்கு, மத்திய மாவட்ட செயற்குழு

விழுப்புரம் : விழுப்புரம் தி.மு.க., தெற்கு மற்றும் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதம சிகாமணி, லட்சுமணன் ஆகியோரது எம்.எல்.ஏ., அறிக்கை:விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 6ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் நடக்கிறது.கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றுகிறார்.கூட்டத்தில், அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை மாவட்டம் முழுதும் மக்கள் முன் எடுத்து செல்ல சாதனை விளக்க கூட்டங்கள் நடத்துவது. ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி முன்னிலை வகிக்கின்றனர்.

மத்திய மாவட்ட செயற்குழு

மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை 6ம் தேதி காலை 10:00 மணிக்கு விழுப்புரம், கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி