உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிறந்த நாள்

தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிறந்த நாள்

விழுப்புரம்; காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கல்பட்டில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஆர்.பி., முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா ஏற்பாட்டின்பேரில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி பிறந்த நாளை முன்னிட்டு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், அரசு வழக்கறிஞர் கோபு, ஊராட்சி தலைவர்கள் சாரதாம்பாள் கலியமூர்த்தி, பாண்டியன், அற்புதராஜ், மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாகரன், ஜோதி, முன்னாள் தலைவர் கல்விராயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை