மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
30-Mar-2025
கண்டமங்கலம் : கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.பிடாரிப்பட்டு, பெரிய பாபுசமுத்திரம் மற்றும் நவமால்காப்பேரி ஆகிய இடங்களில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சேர்மன் வாசன் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய அவைத்தலைவர் சிவக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் செல்வமணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர்.மாவட்ட நிர்வாகிகள் சீனுசெல்வரங்கம், சம்பத்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் மதியழகன், பொற்கலை, ஒன்றிய பொருளாளர் மகேந்திரவர்மன், மாவட்ட பிரதிநிதிகள் லட்சுமணன், பால தமிழரசன், செந்தில்.ஊராட்சி தலைவர்கள் மணிமேகலை சின்னத்தம்பி, சரவணன், ரஞ்சிதம் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டபாணி, ராசாத்தி வெங்கடேசன், சரவணன், ஒ்ன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
30-Mar-2025