உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நெய்குப்பியில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா ராஜேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் காளி வரவேற்றனர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், வர்த்தகர் அணி பிரகாஷ், ஒன்றிய அவைத்தலைவர் அமராவதி, விவசாய அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ேஹமநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை