உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நான்காண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம்

தி.மு.க., நான்காண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., நான்கு ஆண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.அண்ணா திடலில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் ராயல் அன்பு, பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல், பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினார். தலைமை கழக பேச்சாளர் அப்துல் வாகப், கட்சி நிர்வாகிகள் விஜயபாபு, கிருஷ்ணராஜ், நகர பொருளாளர் சையத் நாசர், நகர அவை தலைவர் செந்தில் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் சதாம் காதர் உசேன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை